பிரிட்டனைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது பெயர் மற்றும் அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்காமல் ‘ரெட்டிட்’ என்ற இணையத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில், “எனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் ஒருவரே தந்தை என்பதை அறிந்தோம். அதை உறுதி செய்ய இருவரும் தனித்தனியாக மரபணு பரிசோதனை செய்தோம். அதில் என் மனைவி எனது சகோதரி என்பது தெரியவந்துள்ளது. 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நாங்கள் இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம்.
என் அம்மாவும் என் மனைவியின் அம்மாவும் எங்களின் தந்தை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அவரும் எங்களுடன் இல்லாததால் தெரியவில்லை. இந்த பிரச்னையால் பிறக்கப் போகும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? உங்கள் ஆலோசனை தேவை.
இதை தெரிந்துகொண்ட பிறகும் எங்கள் உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்களை யாரும் பிரிக்க விடமாட்டேன். அவளும் அதை விரும்பமாட்டாள். எங்களுக்கு என்ன நடக்கும்? நாங்கள் என்ன செய்யவேண்டும்? இதை அப்படியே புதைத்துவிடவா?” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு ஏராளமானோர் கருத்து தெரிவித்து தங்களது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். “நீங்கள் இன்னும் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், ஒன்றாக இருங்கள். குழந்தையை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்பினால் வைத்துக்கொள்ளுங்கள். இதுபற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“உங்கள் காதல் வலுவாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைத் தேர்வு செய்யவில்லை, எனவே மறந்துவிடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்”என்றும் அவருக்கு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.
நேற்றுவரை காதல் மனைவி என்று இருந்தவரிடம், “அவர் இனிமேல் உங்க தங்கச்சி” என்று சொன்னால் யார்தான் வருந்தமாட்டார்கள்?!