உலகில் பெரும்பாலானோரால் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு சமூக வலைதளம் ட்விட்டர் ஆகும். முக்கியத் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் தளமாக ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. அதேபோல் ட்வீட்-டெக் என்ற தளமும் அனைவராலும் ட்வீட் செய்வதற்காக பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படு வருகின்றது.
இந்நிலையில், ட்விட்டர் Direct Messages மூலம் பலருக்கு தேவையில்லாத செய்திகள் வருவதைத் தடுக்கவும், அறிமுகம் இல்லாத கணக்கிலிருந்து வரும் செய்திகளை தானியங்கி முறையில் ட்விட்டர் வடிகட்ட உள்ளதாகவும் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது ட்விட்டர்.
இந்நிலையில் இன்று காலை முதல் ட்விட்டர் மற்றும் ட்வீட்-டெக் தளங்கள் இயங்கவில்லை. குறிப்பாக பகிரும் வசதி போன்ற முக்கிய பயன்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ட்விட்டர் பயனாளர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். மேலும், பாதிப்பு குறித்து ட்விட்டருக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “ட்விட்டர் மற்றும் ட்வீட்-டெக் தளங்கள் செயலிழப்புகளை சந்தித்து வருகின்றன.
ட்வீட் செய்வது, அறிவிப்புகளைப் பெறுவது அல்லது டி.எம்-களைப் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அதனை நாங்கள் தற்போது சரிசெய்து கொண்டிருக்கிறோம், விரைவில் இயல்பு நிலைக்கு வரும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரின் இந்தக் கோளாறால் பல லட்சம் பயனாளர்கள் ட்விட்டரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.