வைரல்

டாஸ்மாக் சரக்குல ‘பல்லி’: ஊட்டியில் குடிமகன்கள் அலறல்!

உதகையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மது பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டாஸ்மாக் சரக்குல ‘பல்லி’: ஊட்டியில் குடிமகன்கள் அலறல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சுற்றுலா நகரமான உதகையில் உள்ள கமர்சியல் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் குடிமகன் ஒருவர் நூறு ரூபாய் கொடுத்து மதுபாட்டிலை வாங்கி உள்ளார். மது பாட்டிலை திறந்து குடிக்க முயற்சி மேற்கொண்டபோது, மதுபான பாட்டிலில் பள்ளி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

டாஸ்மாக் சரக்குல ‘பல்லி’: ஊட்டியில் குடிமகன்கள் அலறல்!

உடனடியாக மது விற்ற டாஸ்மாக் ஊழியர்களிடம் காண்பித்தபோது, அதை டாஸ்மாக் ஊழியர்கள் உதாசீனப்படுத்தி அவரை மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த குடிமகன் மதுவிலக்கு போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் மதுவிலக்கு போலிஸார் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் மது பாட்டிலை திறந்து கலப்படம் செய்யும் போது பள்ளி விழுந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் உரிய விலைக்கு மேல் 20 ரூபாய் வரை குடிமகன்களிடம் டாஸ்மாக் ஊழியர்கள் வசூல் செய்து வரும் நிலையில், மது பாட்டிலில் பள்ளி இருந்த சம்பவம் குடிமகன்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories