ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளம் அபாயக்கட்டத்தை கடந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ராஜஸ்தானின் துங்கர்பூர் நகரில் பள்ளி முடிந்து மாணவர்கள் 12 பேர், லாரியில் வீடுகளுக்கு திரும்ப முயன்றுள்ளனர்.
அவர்களை ஏற்றி சென்ற லாரி ராம்பூர் தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது, பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தரைப்பாலத்திலிருந்து அடித்து செல்லப்பட்டு, அதன் முன்பகுதி ஆற்று வெள்ளத்தில் மூழ்கியபடி நின்றது.
மாணவர்களின் கூக்குரல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், லாரியில் இருந்த 12 மாணவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.