மழைக் காலங்களில் டெங்குக் காய்ச்சல் அதிகம் பரவுவதும், பல உயிர்கள் பரிதபமாக உயிரிழப்பதும் பெரும் வாடிக்கையாகிவிட்டது. மத்திய அரசாங்கத்தின் சுகாத்தராத்துறையில் அலட்சிய நடவடிக்கையால் வடமாநிலங்களில் பலர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் தற்போது டெங்கு காய்ச்சால் பரவத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதைக் காட்டிலும் மக்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன, அது எப்படி பரவுகிறது, மற்ற காய்ச்சல்களிலிருந்து எப்படி அதை வேறுபடுத்தி அறிவது, அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன என்பதனை அறிந்துக்கொள்ளவேண்டும்
டெங்குவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
நல்ல தண்ணீரில் இனப்பெருக்கம் செய்யக் கூடிய `ஏ.டிஸ் என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த டெங்குவைரஸ் பரவுகிறது.
1. நல்ல தண்ணீரை சேமித்து வைக்கும் குடங்கள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும்.
2. தண்ணீரை கட்டாயம் காய்ச்சி தான் பருகவேண்டும்.
3. தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் கலன்களை, பாத்திரங்களை வாரம் ஒரு முறையாவது பிளீச்சிங் பவுடரால் தேய்த்துக் கழுவ வேண்டும்.
4. வீட்டை சுற்றி டயர், காலி பாட்டில்கள், பேப்பர் கப்புகள், தேங்காய் மட்டைகள், இளநீர் கூடுகள் ஆகியவற்றை நீக்கி சுத்தப்படுத்த வேண்டும்.
5. குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்.
6. சமையல் செய்வதற்கு முன், சாப்பிடுவதற்கு முன், மலம் கழித்த பின் கட்டாயம் சோப்பால் கைகளை கழுவ வேண்டும்.
7. வீடுகளில் மட்டுமல்லாமல் பள்ளி நிர்வாகமும் குழந்தைகள் உடல்நலம் குறித்துக் கண்காணித்து வரவேண்டும்.
8. வீடுகளில் கொசுவலைகளை பயன்படுத்தவேண்டும்.
9. எந்த காய்ச்சால இருந்தாலும் 3 நாட்கள் இருந்தால் உடனே மருத்துவரை அனுக வேண்டும்.
இதனை மேற்கொண்டால் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
1. உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்
2. கடுமையான தலைவலி
3. உதடு, நாக்கு, வாய் உலர்ந்து காணப்படுதல்
4. தாங்க முடியாத காய்ச்சல்
5. சிறுநீர் கழிப்பது குறைதல்
6. கண்கள் குழி விழுந்தது போல் காணப்படல், மற்றும் கண்ணுக்கு பின்புறம் வலி
7. கை, கால் விரல்கள் ஜில்லிட்டு இருத்தல்
8. இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருத்தல்
9. தொடர்ச்சியான வாந்தி
10. கண்ணீர் குறைவாகவோ, வராமலோ இருப்பது.
11. வயிற்றுவலி, உடல்வலி, உடல்சோர்வு, மூட்டுவலி
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்