வைரல்

சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு முன் செய்ய முடியாமல் போன கடைசி ஆசை - தாய்க்காக நிறைவேற்றிய அன்பு மகள்!

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விட்டுச்சென்ற கடமையை அவரது மகள் நிறைவேற்றியுள்ளார். அதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு முன் செய்ய முடியாமல் போன கடைசி ஆசை - தாய்க்காக நிறைவேற்றிய அன்பு மகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது பதவிக் காலத்தில் வெளிநாட்டில் தவித்த பல இந்தியர்களுக்கு உதவி செய்துள்ளார். கடந்த தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடாமல் ஓய்வு எடுத்துவந்த சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார்.

இவர் இறப்பதற்கு சிறிது நேரம் முன்பு குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் ஆதரவாக வாதாடிய ஹரிஸ் சால்வேவிடம் பேசியுள்ளார். அப்போது சுஷ்மா, தன்னிடம் கூறிய கடைசி வார்த்தைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார் அவர்.

அதில், “அன்றைய தினம் இரவு 8.50 மணிக்கு சுஷ்மா அவர்களிடம் என பேசினேன். அது மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. நான் எனக்குக் கொடுக்கவேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தைத் தர வேண்டும் என கூறினேன்.

பின்னர் கட்டாயம் நேரில் வந்து வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்தேன். அவரும் அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறினார்.” என்று தெரிவித்திருந்தார். ஆனால் ஆகஸ்ட் 6ம் தேதி இரவு சுஷ்மா சுவராஜ் உயிரிழந்துவிட்டார்.

அதன்பின்பு ஹரிஸ் சால்வேவினால் அந்த ஒரு ரூபாய் கட்டணத்தை வாங்க முடியாமல் போனது. இந்நிலையில் சுஷ்மா சுவராஜ் விட்டுச்சென்ற கடமையை அவரது மகள் நிறைவேற்றியுள்ளார்.

சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி நேற்றைய தினம் வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேவைச் சந்தித்து அவருடைய கட்டணமாக ஒரு ரூபாயை வழங்கினார். இந்த சம்பவத்தை சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கெளசல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “சுஷ்மா சுவராஜின் கடைசி கால ஆசையை/கடமையை பன்சூரி நிறைவேற்றியிருக்கிரார். அவர் ஹரிஸ் சால்வேவை அழைத்து குல்பூஷண் வழக்கிற்கான அவருடைய கட்டணம் ஒரு ரூபாயை வழங்கியுள்ளார்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குல்பூஷண் ஜாதவ் வழக்கில் அவருக்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றத்தில் ஹரிஸ் சால்வே ஆஜராகினார். அவரை அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்த சுஷ்மா சுவராஜ் நியமித்தார். அந்த வழக்கில் வாதாடுவதற்கான கட்டணமாக அவர் ரூபாய் 1 பெற்றுக்கொள்வதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories