வைரல்

‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?!

மனைவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் செல்போனுக்கு அனுப்பிய வில்லன் யாரென்று தெரிந்து கொள்ள செய்தியை முழுமையாக படியுங்கள். 

‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து திரும்பிய அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு தினந்தோறும் அவர் மனைவி உடைமாற்றும் நிர்வாண வீடியோ காட்சிகள் வந்து கொண்டிருந்தன.

இதனால் திடுக்கிட்டுப் போன அவர் உடனே கோழிக்கோடு திரும்பினார். அவர் மனைவியிடமும், குடும்பத்தினரிடமும் இதைப்பற்றிக் கூறினார். அவர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். தங்களது வீட்டு படுக்கையறையில் யாரோ ஒருவர் ரகசிய கேமராவை ஒளித்து வைத்திருப்பதாக சந்தேகம் கொண்டு போலிஸில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அந்த வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர். படுக்கையறையில் ஒரு இடம் விடாமல் சோதித்துப் பார்த்தனர். பின்னர் காட்சிகளின் திசையை போலிஸார் சோதனை செய்தனர். சைபர் குற்றப் பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் வில்லனை கண்டுபிடித்தனர்.

வெளிநாட்டில் இருந்து வாங்கி வரப்பட்ட ஸ்மார்ட் டி.வியே அந்த வில்லன் என்பது அனைவருக்கும் தெரியவந்தபோது அதிர்ச்சியடைந்தனர். ஸ்மார்ட் டி.வி மூலம் தனது வெளிநாட்டு கணவருடன், அவருடைய மனைவி பேசுவது வழக்கம். இருவரும் வீடியோ மூலம் தினந்தோறும் பல மணிநேரம் பேசுவார்கள். அதன்பிறகு டி.வியில் வேறு சேனல்களை பார்க்கத் தொடங்கி விடுவார்.

‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?!

ஆனால், ஆன்லைன் சர்வர் தொடர்ந்து வேலைசெய்து வரும்நிலையில் கேமரா இணைப்பு துண்டிக்கப்படாமல் தொடர்ந்து இயங்கி வீட்டின் படுக்கையறைக் காட்சிகளை அந்த இளைஞருக்கு அனுப்பி வந்துள்ளது. இவ்வாறாகத்தான் மனைவியின் நிர்வாண காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஸ்மார்ட் டி.வி போன்ற நவீன சாதனங்கள் இயக்கப்பட்ட பிறகு, இணைய இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படும். இப்படிதான் பல அந்தரங்க ரகசியங்கள் வெளியாகின்றன. இதுபோன்ற சாதனங்களை கையாளும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சைபர் கிரைம் போலிஸார் எச்சரித்துள்ளனர்.

படுக்கையறையில் ஸ்மார்ட் டிவி பயன்படுத்துபவர்களே உஷார்! உஷார்!!

banner

Related Stories

Related Stories