புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் நூறு ரூபாய் முதல் பல லட்சம் வரை அபராதம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து போலீசார் வாடகை டாக்சிகளில் உள்ள முதலுதவி பெட்டிகளையும் சோதனை செய்கின்றனர். முதலுதவி பெட்டிகளை சோதனை செய்யும் போது அதில் ஆணுறை இல்லை என தெரியவந்தால் அந்த டாக்சிக்கு அபராதம் விதிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய டிரைவர்கள், ஆணுறையின் பயன்பாடுகள் குறித்து போக்குவரத்து காவலர்களுக்கு ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து கேட்டால் பதில் தெரியாமல் சிரிக்கினறனர். அனால், அபராதம் மட்டும் வசூலிக்கின்றனர்'' என வேதனைப்பட தெரிவிக்கின்றனர்.