உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் நிராங்கர் சிங். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பேருந்துகளை வாடகைக்கு இயக்கி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி நிராங்கர் சிங்கின் பஸ் ஓட்டுநர்ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பேருந்தை இயக்கியதாகவும் அதற்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த நிராங்கர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
இது தொடர்பாக நிராங்கர் சிங் கூறுகையில், "எனக்குச் சொந்தமான பேருந்தின் ஓட்டுநர், ஹெல்மெட் அணியால் பேருந்து ஓட்டியதாக கூறி கடந்த 11ம் தேதி போக்குவரத்துத் துறையினர் ரூ.500 அபராதம் விதித்தனர். இதுபோன்று காரணமின்றி அபராதம் விதித்து வருகின்றனர்.
பஸ் ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் இருந்தார் என்பதற்காக அபராதம் எப்படி விதிக்க முடியும் என்று அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினார் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ஹெல்மெட் என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டோம் என்றனர்.
ஆனால், இதை நான் சும்மாவிடப் போவதில்லை. எனக்குத் தீர்வு கிடைக்க நான் நீதிமன்றம் செல்லப் போகிறேன்" எனத் தெரிவித்தார்