நார்வே நாட்டின் அந்தோயா தீவைச் சேர்ந்தவர் ஆஸ்கார் லுண்டால். 19 வயது இளைஞரான இவர் தனது பொழுதுபோக்கிற்காக மீன்களை பிடிப்பதை வழக்கமாக கொண்டவர்.
நார்வே கடற்கரையில் தனது விடுமுறையை கழிக்க கடலில் தூண்டில் போட்ட ஆஸ்கார் லுண்டாலுக்கு டைனோசர் போன்ற மீன்கள் சிக்கின. டைனோசர் போன்று நீண்ட வாலும், பெரிய தலையும், பெரிய கண்களையும் கொண்ட அதிசய மீன்கள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இது எலி மீன் வகையைச் சேர்ந்ததது என்று கடல்சார் நிபுணர்கள் நம்புகின்றனர். சுறாமீன் வகையைச் சேர்ந்தவையாக இவை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பொதுவாக இந்த கடற்கரையில் இதுபோன்ற மீன்கள் கிடைப்பது இதுவே முதல்முறை என்று மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்த அதிசய எலிமீன்கள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.