வைரல்

பசியால் வாடிய தங்கைக்கு ஃப்ரைட் ரைஸ் சமைத்து, ஊட்டிவிட்ட 5 வயது அண்ணன் - இந்தோனேசியாவில் ஒரு ‘பாசமலர்’!

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் தனது தங்கைக்காக சமையல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

பசியால் வாடிய  தங்கைக்கு ஃப்ரைட் ரைஸ் சமைத்து, ஊட்டிவிட்ட 5 வயது அண்ணன் - இந்தோனேசியாவில் ஒரு ‘பாசமலர்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பசியால் தவித்த தனது தங்கைக்கு உணவு சமைத்து ஊட்டிவிட்ட 5 வயது அண்ணனின் நெகிழ்ச்சிமிகு காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

அண்ணன், தங்கை பாசத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் காலம் முதல் இன்று வரை ஏராளமான சினிமா காட்சிகள், பாடல்கள், திரைப்படங்கள் வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்திருக்கின்றன.

ஆனால் அப்படி ஒரு அண்ணன், தங்கை பாசத்தை கண்முன்னே காட்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவில் பசியில் வாடிய தனது தங்கைக்காக ஃப்ரைட் ரைஸ் சமைத்துக் கொடுத்துள்ளார் 5 வயது பாசக்கார அண்ணன். அதில், தனக்குத் தெரிந்த வகையில் ஒரு பெரிய வாணலில் எண்ணெய்யை ஊற்றி முட்டையை உடைத்து வதக்கி ஏற்கெனவே நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து வதக்கியுள்ளான்.

பின்னர் சோற்றை அதில் கொட்டி, மசாலாக்களை சேர்த்துப் புரட்டி எடுத்துவிட்டு தங்கைக்கு தனது கைகளாலேயே ஊட்டிவிட்டு தானும் உண்கிறான்.

ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, இதுவரை ஆறு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்வையாளர்களால் இந்தக் காணொளி பார்க்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories