உடல் எடை அதிகரிப்பால் ஆண்களும் பெண்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் கூட உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுதான். உணவில் உள்ள கொழுப்புகள் நம் உடலில் அப்படியே தங்கிவிடுவதால் தான் உடல் பெருத்துவிடுகிறது. உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். மேலும், சிலர் விளம்பரங்களை நம்பி உடல் எடையை குறைக்கிறோம் என நம்பி ஏமாந்தது தான் மிச்சம்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் முதலில், சரியான நேரத்திற்கு துரித உணவுகள் அல்லாத தரமான சத்துள்ள உணவை சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிப்பது அவசியம். தினமும் ஒரு வேளை சமைக்காத உணவுகள் (சாலட், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள்) சாப்பிடவும். மற்ற இருவேளைகளில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். இதனுடன் தைராய்டு அளவு சீராக இருக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் பருமன் உள்ளவர்கள் கொடாம்புளி ட்ரிங்கை 2 மாதங்கள் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும். இதை அருந்துவதற்கு பின் வரும் விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
என்னென்ன விதிமுறைகள்?
தினமும் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். உடல் சூடாகுமா என பயம் வேண்டாம். அதற்குதான் அதிக அளவுக்குத் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 2 மாதம் தொடர்ந்து இந்த கொடம்புளி டிரிங்கை செய்து குடிக்க வேண்டும்.
கொடம்புளி டிரிங்க் செய்ய பெரிதாக எந்த பொருட்களும் தேவையில்லை. சிறிதளவு கொடம்புளி மட்டுமே போதுமானது.
செய்முறை:
கொடம்புளியை பயன்படுத்தும் முன் கழுவவும். இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில், கழுவிய கொடம்புளியை போடவும். மறுநாள் காலை அதை எடுத்து மண் பானை அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றவும். அதில் ஊறவைத்த கொடம்புளியும் அதன் தண்ணீரையும் ஊற்ற வேண்டும்.
அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இளஞ்சூடாக மாறியதும் கண்ணாடி ஜாரில் இவற்றை ஊற்றி வைக்கவும்.
எப்படி அருந்துவது?
சேமித்து வைத்த கண்ணாடி ஜாரிலிருந்து ஒரு டம்ளர் அளவு கொடம்புளி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். காலை உணவு சாப்பிடுவதற்கு முன், அரை மணி நேரத்துக்கு முன்பு இதைக் குடிக்கவும். அதுபோல மதிய உணவு, இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பே, அரை மணி நேரத்துக்கு முன் இதை ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து விட வேண்டும்.
பலன்கள்...
கொடம்புளி பருகுவதால் அதிக பசி எடுக்கும் பிரச்னை குறையும். மேலும், மகிழ்ச்சி தரும் ஹார்மோன்களை சமன்படுத்தும். இதனால் அதிகமாக சாப்பிடும் எண்ணம் வராது. செரிமானத்துக்கு சிறந்தது.
உடலில் எந்த இடத்தில் கொழுப்பு இருந்தாலும் கொடம்புளி அதை அகற்றும். தொடை, இடுப்பு, பின் இடுப்பு, புஜம், வயிறு போன்ற அனைத்து இடங்களில் உள்ள கொழுப்பையும் கரைக்கும். இந்த கொடம்புளி டிரிங்கை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.