தாய்லாந்து நாட்டில் உள்ள நாகோன் ராட்சசிமா என்ற இடத்தில் ங்கா - தொங் என்ற பெயருடைய ஒரு குட்டியானை காட்டிலிருந்து அருகே உள்ள சாலைப் பகுதிக்கு வந்துள்ளது. பின்னர், அந்த யானை நெடுஞ்சாலையிலேயே படுத்துறங்கியது.
அப்போது அவ்வழியே காரில் வந்த நாட்டவத் பட்சுங்சிங், யானை ஒன்று நடுரோட்டில் தூங்குவதைக் கண்டதும், தனது காரை நிறுத்தினார். பணிக்குச் செல்ல வேண்டும் என்பதால் நீண்ட நேரம் ஒலியெழுப்பியவாறே இருந்தார். அதை அந்த யானை சிறிதும் கண்டுகொள்ளாமல் துயில் கொண்டிருந்தது. பின்னர், கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்குப் பின் அந்த யானை அங்கிருந்து எழுந்து சென்றது. நட்டாவட் பட்சுசிங் இந்தக் காட்சியை படம் பிடித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நட்டாவத்திடம், நங்கா-தாங் என்ற யானை சில காலமாக தொல்லைகளை உருவாக்கி வருகிறது என தெரிவித்தனர். கான்கிரீட்டின் வெப்பம் காரணமாக இது சாலையில் தூங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.