வைரல்

பக்கவிளைவுகள் இல்லாத ‘பளிச்’ பற்களுக்கு... நிபுணர்கள் தரும் ஈஸி டிப்ஸ்!

இயற்கையாகவே வெண்மை நிற பற்கள் பெற்று, அவை ஆரோக்கியத்துடன் இருக்க இவற்றைப் பின்பற்றினாலே போதும்...

பக்கவிளைவுகள் இல்லாத ‘பளிச்’ பற்களுக்கு... நிபுணர்கள் தரும் ஈஸி டிப்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செல்ஃபி கேமராவுக்கும் பல் மற்றும் அழகியல் மருத்துவத் துறைக்கும் நிறைய தொடர்பு உண்டு. செல்ஃபி கேமரா வந்தபின், மிக விரைவில் வளர்ச்சி பெற்ற துறை இவை. பற்கள் உடனடியாக வெண்மை பெற டீத் வொயிட்னிங், பிளீச்சிங், வொயிட்னிங் ஸ்டிரிப்ஸ் போன்றவை கை கொடுக்கும். ஆனால், இதெல்லாம் நிரந்தரமானதா? பாதுகாப்பானதா? எனக் கேட்டால் பதில் நமக்குச் சாதகமாக இருக்காது.

மஞ்சள் பற்கள் நோயல்ல, குறைபாடும் அல்ல… அதற்காக நிமிடங்களில் பற்களை வெள்ளையாக்கும் வொயிட்னிங் டூத் பேஸ்டால், பற்களின் எனாமல் நீங்கி பற்சேதமடையும். இதற்கு ‘சார்கோல் பவுடரால்’ வாரம் இருமுறை பல் தேய்த்தால் போதும். மேலும் ஆயில் புல்லிங், வாழைப்பழத் தோலால் பற்களில் மசாஜ் செய்வது நல்லது. அன்னாசி பழத்தைக் கடித்து சாப்பிட, அதில் உள்ள bromelain பற்களை வெண்மையாக்க உதவுகிறது. நாம் எப்போதும் பயன்படுத்தும் பேஸ்ட் பட்டாணி அளவு மட்டுமே இருக்க வேண்டும். இதெல்லாம் பற்களின் தரத்தை பாதுகாக்கும்.

சாக்லேட், சர்க்கரை, குளிர்பானங்கள், ஐஸ் வாட்டர், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது, புகை, ஒயின், கோலா பானங்கள் ஆகியவை கட்டாயம் தவிர்க்கவும். இயற்கையாகவே வெண்மை நிற பற்கள் பெற்று, அவை ஆரோக்கியத்துடன் இருக்க, நார்ச்சத்துள்ள காய், கனிகள், மோர், கடல் உணவுகள், நட்ஸ், விதைகள் சாப்பிட நன்மை தரும்.

banner

Related Stories

Related Stories