வைரல்

ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து தருவதாக முதியவர்களிடம் மோசடி: கவனச் சிதறலை பயன்படுத்தும் சைபர் திருடர்கள்!

ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கத் தெரியாதவர்களை ஏமாற்றி மோசடி சம்பங்களில் ஈடுபட்டுவந்த கொள்ளையனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து தருவதாக முதியவர்களிடம் மோசடி: கவனச் சிதறலை பயன்படுத்தும் சைபர் திருடர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தொழில்நுட்பம் எளிதாகி வரும் அதே நேரம், ஆன்லைன் மற்றும் ஏ.டி.எம் பரிவர்த்தனைகளில் பல்வேறு மோசடிகள் சரிசமமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. சைபர் திருட்டு நாம் நினைக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமரா பொருத்தி ஏ.டி.எம் கார்டு தகவல்களை திருடுவது, ஆன்லைனில் பரிவர்த்தனைகளில் மோசடி செய்வது என பல வகையில் இந்த மோசடிகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக முதியவர்களே இந்த மோசடியாளர்களின் இலக்கு.

மக்கள் மத்தியில் காவல்துறையும், வங்கிகளும் விழிப்புணர்வு அளித்து வந்தாலும், அந்தக் குற்றத்தை தடுக்க அவர்களால் போதிய நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கப்பலாம்பாடி பகுதியை சேர்ந்த தேவிகா ஏன்ற பெண்ணிடம் நவீன்குமார் என்பவன் மோசடி செய்து 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துள்ளான். இதனையடுத்து தேவிகா போலிஸில் புகார் கொடுத்தார். போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து தருவதாக முதியவர்களிடம் மோசடி: கவனச் சிதறலை பயன்படுத்தும் சைபர் திருடர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் எரும்பூண்டி பகுதியை சேர்ந்த நவீன்குமார், இதுபோன்ற பல கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்திருக்கிறான். ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கத் தெரியாதவர்கள், முதியவர்கள் என குறிவைத்து இந்த மோசடி சம்பவத்தில் நவீன்குமார் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

போலிஸிடம் தான் கொள்ளை அடிப்பது எப்படி என்பது பற்றி உண்மைகளை கூறியிருக்கிறான் நவீன். முதலில், ஏ.டி.எம் மையங்களின் அருகில் நின்றுக்கொண்டு பணம் எடுக்கத் தெரியாமால் உள்ள வயதானவர்களிடம் பணம் எடுக்க உதவி செய்வதாகக் கூறி உதவதுபோல் நடிப்பான். கார்டை இயந்திரத்தில் ஸ்வைப் செய்து, அவர்களிடம் ரகசிய எண்ணை தெரிந்து கொள்வான். பாதியிலேயே அந்த பரிவர்த்தனையை ரத்து செய்துவிட்டு, இந்த ஏ.எடி.எம் மையத்தில் பணம் வரவில்லை வேறு மையத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி முதியவர்களின் கவனம் சிதறும் போது ஏற்கனவே போலியாக வைத்திருக்கும் ஏ.டி.எம் கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவான். பின்பு வேறு ஏ.டி.எம்-ல் அந்த கார்டை செலுத்தி அந்த ரகசிய எண் மூலம் அதில் உள்ள பணத்தை திருடி மோசடி செய்து வந்திருக்கிறான் நவீன்.

இதேப்போலப் பல பகுதிகளில் கொள்ளையடித்துள்ள நவீன்குமார் மீது ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் லட்சக் கணக்கில் கொள்ளையடித்துள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நவீன்குமாரிடமிருந்து 25 லட்ச ரூபாயை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories