வைரல்

மன அழுத்தத்தில் இருந்து வெளிவர ஆடையில்லாமல் விக்கெட் கீப்பிங் : வைரல் ஆன இங்கிலாந்து வீராங்கனை

கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையின் புகைப்படம் வைரலானது.

மன அழுத்தத்தில் இருந்து வெளிவர ஆடையில்லாமல் விக்கெட் கீப்பிங் : வைரல் ஆன இங்கிலாந்து வீராங்கனை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையாக 2006ம் ஆண்டு நடந்த இந்தியாவுக்கு எதிரான T20 போட்டி மூலம் அறிமுகமானவர் சாரா டெய்லர்.

இவர் பேட்டிங் மட்டுமல்லாமல் சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வருகிறார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 T20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

மன அழுத்தத்தில் இருந்து வெளிவர ஆடையில்லாமல் விக்கெட் கீப்பிங் : வைரல் ஆன இங்கிலாந்து வீராங்கனை

இப்படி இருக்கையில், சமீப காலங்களாக சாரா எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. நடப்பு ஆஷஸ் T20 கிரிக்கெட் போட்டியிலும் சாரா டெய்லர் இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து பெண்கள் எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த இதழ் ஒன்றுக்கு சாரா டெய்லர் தான் நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்வது போன்ற புகைப்படத்தை அளித்திருக்கிறார்.

மேலும், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சாரா, ” “என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும். இது என்னுடைய சவுகரியமான சூழலுக்கு அப்பாற்பட்டு உள்ளது என்று. ஆனால் இதை செய்வது எனக்கு பெருமையையே அளிக்கிறது.

ஒவ்வொரு பெண்ணின் செயல்களும் பிரம்மிக்க வைக்கக் கூடியவையே. ஒவ்வொரு பெண்ணும் அழகுதான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சாராவின் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories