தமிழகத்தில் போலி சாமியாரின் ஏமாற்று வேலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலி சாமியார்கள் பற்றி தினசரி செய்திகளில் வந்தாளும் கூட மக்கள் அவர்களை நம்பி ஏமாந்துப் போவது வாடிக்கையாகிவிட்டது. அப்படி போலி சாமியாரின் பேச்சைக் கேட்டு ஒரு பெண் சிறைக்கு சென்றுள்ளார்.
சென்னையில் உள்ள கே.வி.என்.புரத்தைச் சேர்ந்தவர் மைதிலி. கூலி தொழில் செய்துவருகிறார். குடிசையில் வாழும் இவருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதனால், குடும்பம் வறுமையில் இருப்பதற்கு என்ன காரணம் என்று போலி சாமியாரிடன் ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். ஜாதகம் பார்க்க சென்ற இடத்தில் போலி சாமியார் இவர்களின் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி இவர்களை ஏமாற்றுவதற்கு பல பொய்களை கூறியுள்ளார்.
அப்படிக்கூறும் போது உங்கள் வீட்டில் மந்திர தகடு உள்ளது, அதனை எடுக்காவிட்டால் குடும்பத்திற்கு கேடு வரும் என அச்சமூட்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் அதனை சரி அந்த தகடை தோண்டி எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மைதிலியும் போலி சாமியார் சுரேஷை நம்பி அவருக்கு காணிக்கையாக பணமும், அவர் சொன்ன பரிகாரத்தையும் செய்ய முன்வந்துள்ளார்.
அதன் படி, தனது வீட்டில் இருக்கும் மந்திர தகடுகளை எடுக்க போலி சாமியார் துணையுடன் வீட்டிற்குள் குடி தோண்டியுள்ளார். தோண்டும் போது எடுக்கப்பட்ட மண்ணை மூட்டை மூட்டையாக கட்டி வெளியில் வைத்துள்ளார். தொடர்ந்து 20 நாட்களில் 25 அடி ஆழத்தில் குழிதோண்டியுள்ளார். கடைசி வரை தகடு கிடைக்கவில்லை. ஆனால் அவர் கிட்டதக்க 70 மூட்டைகளில் மணல்களை எடுத்ததுதான் மிச்சம்.
இதனையடுத்து தினமும் இரவு மைதிலி வீட்டில் ஏதோ நடக்கிறது என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் வெளியில் உள்ள மணல் மூட்டைகள் மற்றும் வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர் மைதிலியிடம் விசாரணை நடத்தி போது போலி சாமியாரின் பேச்சைக்கேட்டு இவ்வாறு செய்தாக ஒப்புக்கொண்டார். பின்னர் போலிஸார் கனிம வளத்துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.
அனுமதியில்லாமல் கிணறு போல குழி தோண்டி மணல் எடுத்த குற்றத்திற்காக மைதிலி கைது செய்தனர். மேலும் போலிஸார் போலி சாமியார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.