சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையை ஆண்டுதோரும் கொண்டாடப்படும். இந்த பண்டிகையில், பெண்கள் சகோதரராக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறு கட்டி கொண்டாடுவர்.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி பிரதமர் மோடிக்கு அதிகமான பெண்கள் ராக்கி கட்டியதாக செய்திகள் வெளிவந்தது. மேலும் நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பா.ஜ.கவிற்கு ஆதரவு அளிப்பதாக பொய்யான பிரச்சாரத்தை பா.ஜ.கவினர் பரப்பி வந்தனர்.
ஆனால் அதனை முறியடிக்கும் வகையில் பிரதமர் மோடியை விட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டிற்கு 30 ஆயிரம் பெண்கள் ராக்கி கயிறு அனுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இது பா.ஜ.கவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி அம்மாநில காவல்துறைக்கு உத்தரவு வழங்கியதாக சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். இதனையடுத்து மோடி மீது அவதூறு தெரிவித்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.
உயர் பதவியில் இருந்த சஞ்சீவ் பட், அவருக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும் படி பலவந்தப்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பதாக குஜராத் அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இது உண்மையல்ல, நரேந்திரமோடிக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று சாட்சி அளித்தற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக குஜராத் மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது மத்தியில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜ.க அரசு 2015ம் ஆண்டு அவரின் பதவியை பறித்தது. அதுமட்டுமின்றி 2018ம் ஆண்டு அந்த வழக்குக்காக கைதும் செய்யப்பட்டார்.
இந்த விசாரணையின் முடிவில் ஜாம்நகர் நீதிமன்றம் சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையொட்டி சிறையில் இருக்கும் சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ராக்கி கயிறுகளை அனுப்புவோம், அதன் மூலம் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என தீபிகா ராஜாவத் என்ற பெண் வழக்கறிஞர் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். அதற்காக #OneRakhiForSanjivBhatt என்ற ஹேஷ்டாக் உருவாக்கினர். பலரும் அதற்கு ஆதரவு அளித்தனர்.
இதனையோட்டி ஆகஸ்ட் 15 தேதி ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது சமூக வலைதளங்களில் தீபிகா ராஜாவத் கோரிக்கை ஏற்று பெண்கள் ராக்கி கயிறுகளை அனுப்பினர். ஒட்டுமொத்தமாக சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக 30 ஆயிரம் பெண்கள் ராக்கி கயிறு அனுப்பியிறுப்பதாக தீபிகா ராஜாவத் தெரிவித்துள்ளார். பின்னர் சஞ்சீவ் பட் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பாலன்பூர் சிறைக்கு சென்று, சஞ்சீவ் பட்டிற்கு நேரில் ராக்கி கட்டியதாக தகவல் வெளிவந்ததுள்ளன.
மேலும் இதுகுறித்து சஞ்சீவ் பட் தந்தை கூறும்போது, “இந்த சுதந்திர நாளில் நாங்கள் சுதந்திரஸ்த்துடன் இல்லை” என்று வேதையுடன் தெரிவித்தார். அவரின் விடுதலைக்கு தொடர்ந்து போராடுவோம் என வழக்கறிஞர் தீபிகா ராஜாவத் தெரிவித்துள்ளார்.