வைரல்

“மும்பை நட்சத்திர விடுதி ஒன்றில் 2 அவித்த முட்டை விலை ரூ.1,700 ” : அதிர்ந்து போன வாடிக்கையாளர்!

மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரண்டு அவித்த முட்டைகளுக்கு ரூ1,700 கட்டணமாக வசூலித்துள்ளனர். இது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மும்பை நட்சத்திர விடுதி ஒன்றில் 2 அவித்த முட்டை விலை ரூ.1,700 ” : அதிர்ந்து போன வாடிக்கையாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமீபகாலமாக நட்சத்திர விடுதிகளில் வழங்கப்படும் உணவு பொருட்கள் நூறு மடங்கு விலை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் உள்ள ‘ஜே டபிள்யூ’ என்ற நட்சத்திர விடுதியில் பாலிவுட் நடிகர் ராகுல் 2 வாழைப்பழத்திற்கு 442 ரூபாய் பில் கட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

பின்னர் அந்த நட்சத்திர விடுதிக்கு கலால் மற்றும் வரி விதிப்பு துறை அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் நடந்து முடிந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் ஒன்று கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் தார் என்பவர் மும்பை ஒர்லியில் உள்ள போர் சீசன்ஸ் என்ற நட்சத்திர விடுதி உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட பில் தொகையை பார்த்து அதிர்ந்து போனார். அதில், இரண்டு அவித்த முட்டைகளுக்கு ரூ.1,700 ரூபாய் பில் போடப்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் பில் தொகை ரசீதை கார்த்திக் தார், ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “அந்த முட்டைகளை போட்ட கோழி பணக்கார குடும்பத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் ராகுலையும் அதில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, இரண்டு ஆம்லேட்டுக்கும் அதே கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஓட்டல் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இதனை நியாயப்படுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதிகபடியாக 50 ரூபாய் மதிப்பிலான இரண்டு முட்டைக்கு ரூ.1,700 விலை வசூலிக்கப்பட்டிருப்பது பெரும் அநியாயம் என பல்வேறு தரப்பினரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories