தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ளம் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். பல இடங்களில் மக்கள் வெளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படைவீரர்கள் இறங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதுக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைக்கும் எற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் அப்பகுதி மக்களை மீட்பதாகக் கூறி விளம்பரத்திற்காக அவர் செய்த செயலுக்கு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா, ஹொன்னாலியில் மாவட்டத்தில் உள்ள பெலிமல்லூர் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு உள்ள மக்களை பாதுகாப்பு படையினர் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் கணுக்கால் பகுதி அளவிற்கே நீர் உள்ள பகுதியில் பரிசலில் இரண்டு பேரை அமர வைத்து இவர் நின்ற படி பரிசல் இயக்கினார். கணுக்கால் அளவிற்கு உள்ள தண்ணீரால் பரிசல் நகராமல் இருந்துள்ளதால் அவருடன் வந்த சிலர் பரிலைக் கையால் இழுத்துத் தள்ளிவிடுகின்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். இது அரசியல் கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வெள்ளத்தால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வரும் வேலையில் அவர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்யாமல் விளம்பரத்திற்காக இதுபோல காரியங்களைச் செய்வது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விளம்பரத்திற்காக செய்வது மட்டுமே பா.ஜ.க அரசிற்கும் அதன் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் வேலை என சமூக வலைத்தளத்தில் பலர் கேளி செய்து வருகின்றனர்.