வைரல்

"உணவிற்கு மதம் இல்லை" - இந்து அல்லாதவர் டெலிவரி செய்த உணவை வேண்டாம் என்றவருக்கு Zomato தந்த பதிலடி!

சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்த ஒருவர், டெலிவரி செய்யும் நபர் இந்துவாக இல்லை என்பதால் எனது ஆர்டரை ரத்து செய்வதாகத் தெரிவித்தார்.

"உணவிற்கு மதம் இல்லை" - இந்து அல்லாதவர் டெலிவரி செய்த உணவை வேண்டாம் என்றவருக்கு Zomato தந்த பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது இப்போது நகர வாசிகளுக்கு, குறிப்பாக பேச்சிலர்களுக்கும், அலுவலகம் செல்வோருக்கும் அன்றாடும் வாழ்க்கை முறையாகிவிட்டது. இதற்காக பிரத்யேகமாக ஃபுட்-டெலிவரி செயலிகள் உள்ளன. இந்த டெலிவரி சேவையில் உபர் ஈட்ஸ், ஸ்விகி மற்றும் சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

"உணவிற்கு மதம் இல்லை" - இந்து அல்லாதவர் டெலிவரி செய்த உணவை வேண்டாம் என்றவருக்கு Zomato தந்த பதிலடி!

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த அமித் என்பவர் சோமேட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு உணவு டெலிவரி செய்யும் நபர் பற்றிய தகவல் சோமேட்டோ செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த டெலிவரி நபரின் பெயரை வைத்து அவர் ஒரு இஸ்லாமியர் என்று அமித்துக்கு தெரியவந்துள்ளது. இந்து அல்லாத ஒருவர் உணவு டெலிவரி செய்வதை விரும்பாத அவர், வேறு யாராவது ஒருவரை டெலிவரி செய்ய அனுப்புமாறு சோமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்திடம் கேட்டுள்ளார். ஆனால், சோமேட்டோ நிறுவனம் அதை ஏற்க மறுத்துவிட்டது. இதனால், ஆத்திரமடைந்த அமித், அந்த ஆர்டரை ரத்து செய்து அதற்காகத் தான் செலுத்திய கட்டணத்தையும் திரும்ப பெற விரும்பிவில்லை எனக் கூறிவிட்டார் அமித் .

அதோடு நிறுத்தாமல், ட்விட்டரிலும் வந்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். '' நான் ஆர்டர் செய்திருந்த உணவை, இந்து அல்லாத ஒருவரிடம் சோமேட்டோ நிறுவனம் கொடுத்தனுப்பியது. அவர்கள், உணவு டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது என்றனர். பணத்தைத் திரும்பத் தரமாட்டேன் என்று கூறினார்கள். உணவை டெலிவரியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்னை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு, உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம்." என்று பதிவிட்டார்.

இதற்கு சோமேட்ட கொடுத்த பதிலடி தான் இப்போது இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது. ''உணவிற்கு மதம் கிடையாது. உணவே ஒரு மதம் தான்'' எனக் கூறியது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை நினைவுப்படுத்தும், சோமேட்டோவின் இந்த பதிலடி, இந்திய மக்களின் மனதை வென்றுள்ளது. பாரட்டுகள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories