வைரல்

இந்த குழந்தைக்கா இப்படி நடக்க வேண்டும்?! - டிக் டாக் புகழ் கேரள சிறுமிக்கு நடந்த சோகம்!

டிக்டாக் வீடியோவால் பிரபலமான கேரள சிறுமி ஆருணி பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.

இந்த குழந்தைக்கா இப்படி நடக்க வேண்டும்?! - டிக் டாக் புகழ் கேரள சிறுமிக்கு நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை பயன்படுத்துபவர்களும், அதில் வரும் காணொளிகளை கண்டு ரசிப்பவர்களும் சரிநிகர் அளவில் உள்ளனர். அதிலும், டிக் டாக்கில் குழந்தைகளின் அழகு கொஞ்சும் பாவனைகளுடன் வரும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

அந்த வகையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆருணி என்ற 9 வயது சிறுமிியின் டிக் டாக் வீடியோக்களை 15 ஆயிரத்துக்கும் மேலான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

இந்த குழந்தைக்கா இப்படி நடக்க வேண்டும்?! - டிக் டாக் புகழ் கேரள சிறுமிக்கு நடந்த சோகம்!

கொஞ்சும் மலையாள மொழியில் தனக்கே உரிய மழலை பாணியிலும், வீடியோக்களுக்கு ஏற்றது போன்ற தொணியிலும் பலவகையில் அட்டகாசமாக நடித்து டிக்டாக்கில் பதிவிட்டு வந்திருந்தார் சிறுமி ஆருணி.

இந்த நிலையில், கடுமையான தலைவலி காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி ஆருணி அனுமதிக்கப்பட்டார். சிறுமியை சோதித்து பார்த்த பிறகு தலைவலிக்கான காரணம் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைக்கா இப்படி நடக்க வேண்டும்?! - டிக் டாக் புகழ் கேரள சிறுமிக்கு நடந்த சோகம்!

சிறுமி ஆருணியை தாக்கியது பன்றிக்காய்ச்சல் என்று தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவரது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததை அடுத்து கடந்த ஜூலை 25ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ஆருணியின் மறைவு செய்தி அறிந்த அவரது டிக்டாக் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், டிக் டாக்கில் உள்ள ஆருணியின் பயோவில் “உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி... நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்” என அவரது பெற்றோர் பதிவிட்டுள்ளது, நெஞ்சை உலுக்குகிறது.

banner

Related Stories

Related Stories