சென்னையில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற அனந்தபுரி விரைவு ரயிலில் இருந்து இறங்கு போது, பெண் ஒருவர் தவறி விழுந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது
அனந்துபுரி ரயிலில் குடும்பத்துடன் பயணித்த விஜய பூர்ணிமா என்ற பெண்ணுக்கு தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
ரயில் அதிகாலை 4.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தபோது பூரிணிமா மற்றும் அவரது குழந்தைகள் இறன்கத் தயாராக இருந்துள்ளனர். ஆனால், நடைமேடையில் ரயில் நிற்பதற்கு முன்பே அவரது குழந்தைகள் இறங்கியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த பூர்ணிமா, அவர்களை தடுக்க ரயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார். அப்போது, நிலை இழந்து எதிர்பாராத விதமாக நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையேயான இடைவெளியில் விழுந்து சிக்கிக் கொண்டார்.
ரயில் ஓடிக் கொண்டிருக்கும்பேதே விழுந்ததால் ரயில் 200 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளது. இதனை அறிந்த சக பயணிகள் அவசர கால சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அவர் விழுந்த இடம் ரயில் பெட்டியின் பயோடாய்லெட் அமைப்பு இருந்த இடம். ரயில் நின்றதும் பொது மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மயங்கிய நிலையில் இருந்த பூர்ணிமாவை பின்னர் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, மிகுந்த சிரமத்திற்கு பின் வெளியே எடுத்தனர்.
இந்த சம்பவத்தால் பலத்த காயம் அடைந்த பூர்ணிமா ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்துச் சென்றனர். அங்கு பூர்ணிமாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் இருந்து அனந்தபுரி விரைவு ரயில் வண்டி தாமதமாகச் சென்றது. அதனையடுத்து ஹவுரா விரைவுரயில், பாண்டியன் விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் 1 மணி நேரமாக தாமதாமக வந்து சேர்ந்தனர்.
ரயில் பயணங்களின் போது மிகுந்த எச்சரிக்கையுடன், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.