வைரல்

நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் அமைகிறது விண்வெளி பூங்கா! - கேரள முதல்வர் அசத்தல்

நாட்டிலேயே முதல்முறையாக இஸ்ரோவுடன் இணைந்து கேரளா அரசு திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இஸ்ரோவின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி.,) உள்ளது. இங்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றினார்.

இந்நிலையில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் நிதியுதவியுடன் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இருப்பதாக கேரள அரசு தெரிவித்தது. ஏற்கனவே, திருவனந்தபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் அதாவது நாலேட்ஜ் சிட்டி அமைக்கும் பணிகள் மும்பரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதில், 20 ஏக்கரில் நாட்டிலேயே முதல்முறையாக விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.

மேலும் இந்த விண்வெளி பூங்காவில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நாலேட்ஜ் செண்டர், விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறை செயலர் சிவசங்கர் கூறுகையில், ''விண்வெளி பூங்கா திட்டப்பணிகள் நிறைவேறும்போது, நாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்தில் கேரளா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இத்துறையில் பல வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இதற்கு வழிவகைகள் செய்த விக்ரம் சாராபாய் விண்வெளி மையதிற்கு நன்றி தெரிவித்தார். மேலும் கேரள அரசு அறிவுசார் வளர்ச்சியை எப்போதும் ஊக்குவிக்கும்”. என அவர் இவாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories