வைரல்

மத்திய பிரதேசத்தில் சோப்பு, பெயிண்ட் கொண்டு செயற்கை பால் தயாரிப்பு : 3 ஆலைகளுக்கு சீல்...87 பேர் கைது!

மத்திய பிரதேசத்தில் செயற்கைப் பாலை உற்பத்தி செய்த மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த 87 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சோப்பு, பெயிண்ட் கொண்டு செயற்கை பால் தயாரிப்பு : 3 ஆலைகளுக்கு சீல்...87 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேசத்தில் குவாலியர் சம்பல் என்ற இடத்தில் செயற்கை பால் தயார் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் மூன்று தொழிற்சாலைகளில் சோதனைகளை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் “அதிக நச்சுத்தன்மை வாய்ந்த செயற்கை பால்” தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதிக நச்சு கலந்த செயற்கைப் பாலை உற்பத்தி செய்த குற்றத்திற்காக மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த 87 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து அதிரடிப் படையின் தலைமை அதிகாரி ராஜேஷ் பதோரியா கூறுகையில், "10,000 லிட்டர் கலப்பட பால், 500 கிலோவுக்கும் அதிகமான கலப்பட பால்கோவா, 200 கிலோ கலப்பட பன்னீர் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இவற்றை பல்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யப் பயன்படுத்தி வந்த 11 வேன்களும், 20 டேங்குகளும் கைப்பற்றப்பட்டனர். மேலும் அங்கிருந்து திரவ வடிவிலான துணி சோப்பு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், குளுக்கோஸ் பவுடர் உள்ளிட்டவையும் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”. என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் சோப்பு, பெயிண்ட் கொண்டு செயற்கை பால் தயாரிப்பு : 3 ஆலைகளுக்கு சீல்...87 பேர் கைது!

எண்ணெய், திரவ சோப்பு அல்லது ஷாம்பூ, வெள்ளை பெயிண்ட், குளுக்கோஸ் பவுடர் ஆகியவைச் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் இந்த செயற்கை கலப்பட பாலில், 30 விழுக்காடுதான் பால் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பால், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. ஐந்து ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் பால், சந்தையில் 45 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும், இந்த நிறுவனம் தற்போது வரை 2 லட்சம் லிட்டர் செயற்கை பால் உற்பத்தி செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் அம்மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories