வைரல்

தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் சட்டைக்குள் சென்று பதுங்கிய பாம்பு: சத்தமில்லாமல் மீட்ட வனத்துறை (வீடியோ)

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் சட்டைக்குள் நுழைந்த பாம்பை, வனத்துறையினர் மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் சட்டைக்குள் சென்று பதுங்கிய பாம்பு: சத்தமில்லாமல் மீட்ட வனத்துறை (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உயிரியல் பூங்காக்களில் கூண்டுக்குள் இருக்கும் பாம்பைக் கண்டாலே சிலருக்கும் நடுக்கம் ஏற்படும். ஆனால் இங்கு ஒரு முதியவரின் சட்டைக்குள் பாம்பு நுழைந்ததுக் கூட கண்டுக்கொள்ளாமல் ஆழ்ந்து உறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் அஹமது நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த முதியவர் ஒருவர் தரையில் படுத்துக் கொண்டிருந்த போது அவரின் சட்டைக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

இதனைக் கண்டு மருத்துவமனையில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அவரை எழுப்பினால் அதில் எழும் சத்தத்தால் பாம்பு அவரை கொத்திவிடுமோ என்கிற பயத்தால், யாரும் அவரை எழுப்ப முன்வரவில்லை.

இதனையடுத்து அவரை எழுப்பாமல் மருத்துவமனை நிர்வாகத்திடம் இது தொடர்பாக தெரிவிக்க அவர்கள், வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு வரவழைத்தனர்.

அதனையடுத்து அங்கு வந்த பாம்பு மீட்கும் நபர், எந்த சலசலப்பும் இல்லாமல், முதியவரை எழுப்பாமல் மெதுவாக அவரின் சட்டைக்குள் கிடந்த பாம்பை வெளியே எடுத்தார்.

முன்னதாக தான் மேற்கொள்ளவிருக்கும் பணியை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதியவரின் சட்டைக்குள் புகுந்தது விஷமற்ற பாம்பு, என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories