வைரல்

“ என் கணவரின் சீருடையை அணிந்து நாட்டுக்கு சேவை செய்வேன்” : விமானப்படை வீரரின் மனைவி தன்னம்பிக்கை பதில்

“ நானும் விமானப் படையில் இணைவேன்” என பெங்களூரு இந்திய விமானப்படையின் பயிற்சி விபத்தில் பலியான சமீர் அப்ரால் மனைவி உருக்கமான பதிலை அளித்துள்ளார்.

சமீர் அப்ரால் & கரீமா அப்ரால்
சமீர் அப்ரால் & கரீமா அப்ரால்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி மிராஜ் 2000 போர் விமானத்தில் சித்தார்த் நேகி மற்றும் சமீர் அப்ரால் ஆகிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பயிற்சியின் போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் இருவரும் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்க முயன்றுள்ளனர்.

அப்போது முழுக்கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதியது. தரையில் மோதுவதற்கு முன்பு வீரர்கள் இரண்டு பேரும் விமானத்திலிருந்து வெளியில் குதித்துள்ளனர். அதில், சித்தார்த் நேகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வீரர் சமீர் அப்ரால் மருத்துவமனையில் உயிரிந்தார். இந்த சம்பவத்திற்கு நாடே வருத்தம் தெரிவித்தது.

இந்நிலையில் உயிரிழந்த சமீர் அப்ராலின் மனைவி கரீமா அப்ரால் போர் விமானிக்கான நேர்முக தேர்வில் பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இவர் விமானப்படையில் அடுத்த ஆண்டு சேரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கரீமா அப்ரால் கூறுகையில், “ என் கண்ணீர் இன்னமும் காயவில்லை. ஒரு கோப்பை தேநீரை கையில் கொடுத்து அவரை நாட்டுக்காக சேவை புரிய அனுப்புவேன். என் கணவரின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை காண விரும்புவேன். அவர் அணிந்த சீருடையை நான் அணிவது என்னை மிகவும் ஊக்கப்படுத்தும். நிச்சயம் விரைவில் அணிவேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார். கரீமா அப்ராலின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

banner

Related Stories

Related Stories