வைரல்

குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்திற்கான ஒரு லட்சம் கிலோ உணவு அழுகல் : பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் 

ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவேண்டிய ஒரு லட்சம் கிலோ உணவு தானியங்கள் உணவு சேமிப்பு கிடங்கில் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்திற்கான ஒரு லட்சம் கிலோ உணவு அழுகல் : பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வட மாநிலங்களில் மிகவும் பின் தங்கிய மாநிலமும், ஏழை மாநிலமுமான ஜார்கண்ட் மாநிலத்தில் வறுமையாலும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில், உணவு சேமிப்பு கிடங்கில் 1,200 குவிண்டால் உணவு தானியங்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு மத்திய உணவு வழங்குவதற்கும், அந்தோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களிடையே விநியோகிப்பதற்காகவும் 1,009 குவிண்டால் தானியங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சேகரித்த உணவு பொருட்கள் அழுகிய நிலையில், துர்நாற்றம் விசிய நிலையில் உணவுப் பொருட்கள் வீணாகிப் போனது. இதனை உணவு தானியங்கள் சேமிப்பு கிடங்கில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்ட வந்த போது இந்த அதிர்ச்சி சம்பவம் கண்டுள்ளனர்.

இதுகுறித்து, கிடங்கு மேலாளர் கூறுகையில், “கிடங்கு மேற்கூரை சேதமடைந்து இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னதாக வீணாகப்போன தானியங்களை புதிய தானியப்பகுதிகளில் வைக்கப்பதால் அந்த உணவுப்பகுதியும் அழுகி உள்ளது. மேலும் பள்ளிகளுக்கு தேவையான உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லுமாறு பலமுறை கல்வித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் ஒருமுறை கூட கல்வித் துறை சார்பில் பதில் கடிதம் வரவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க ஆட்சி செய்யும் ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு வழக்கும் உணவு பொருட்கள் பாதுகாப்பாக இல்லாதது அரசின் அலட்சியமே, மேலும் இப்போதும் அதிகாரிகள் இதனை கண்டுபிடிக்கவில்லை என்றால் மாணவர்களுக்கு பா.ஜ.க அரசு இந்த அழுகிய உணவையே வழக்கி இருக்கும். இந்த 1200 குண்டால் உணவு தானியம் வீணாகப்போனதால் பள்ளி மாணவர்களுக்கு மத்திய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories