நாம் வாழும் இவ்வுலகில் நம்முடன் பல அறிய வகையான உயிரினங்களுக்கும் வாழ்கின்றன. அதில் மிகப்பழமையான உயிரினம் ஆமைகள்.
இவை பெரும்பாலும் கடல் பகுதியிலும் நீர்நிலை அருகிலும் வாழக்கூடியது. இந்த உயிரினம் பல ஆண்டுகள் வாழும் ஆற்றல் படைத்தவை. உலகில் அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் ஆமைகளும் இடம் பெற்றுள்ளதால், இதனை பாதுகாக்கும் விதமாக ஆமைகளை வேட்டையாடினால் சிறை தண்டனையைக்கூட சில நாடுகள் விதித்துள்ளது.
மேலும் ஆமைகளை பல தொண்டு நிறுவனங்கள், அரசாங்க அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். அப்படி 187 ஆண்டுகளாக ஒரு ஆமையை வளர்த்து அதனை பாதுகாத்து வரும் செய்திதான் தற்போது வைரலாகி உள்ளது.
சிசெல்ஸில் உள்ள செயின்ட் ஹெலெனா தீவில் ஜொநாதன் என்ற ஆமை வாழ்ந்து வருகிறது. 1832ல் பிறந்த இந்த ஆமை, அல்டாபிரா இனவகையை சேர்ந்த பெரிய ஆமை என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த ஆமையை சிசெல்ஸில் ஆளுநர் பிளான்டேஷன் ஹௌஸில் பராமரித்து வருகிறார். முதன் முதலாக 1886ம் ஆண்டு ஜொநாதன் ஆமையை புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது அந்த ஆமைக்கு வயது 54 ஆகும். அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆமையை புகைப்படம் எடுப்பதனை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி 1886ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது எடுத்தப்புகைப் படத்தையும் ஒன்றாக இணைத்து #187yearschallenge என்று ஹாஸ்டக் மூலம் சமூக வலைதளத்தில் பதிவேற்றும் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.187 வயதில் ஆரோக்கியமாக வாழும் ஆமையை பலரும் பாராட்டி கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
187 வயதுடைய ஜொநாதன்-க்கு வயது முப்புக் காரணமாக உடலில் சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும் பார்வைத் திறனும், நுகரும் திறனும் குறைந்துவிட்டது. எனினும் பற்களால் உண்ணமுடியததால், கலோரிகள் நிறைந்த உணவை மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.