அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த போது திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாரதாவுக்கு திரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் தான் பொறுப்பில் இருக்கும் அரசு மருத்துவமனையை நம்பாமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றது சக மருத்துவர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அதிநவீன மருத்துவ உபகரணங்கள் என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. அனைத்துவகையான நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. அலோபதி மட்டுமல்லாமல் சித்தா, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம், ஹோமியோபதி என அனைத்து வகையான சிகிச்சை முறைகளும் இங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் அன்றி அதனை சுற்றியுள்ள பல மாவட்டத்தில் இருந்து வந்து நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். புதிதாக சில அறுவை சிகிச்சை செய்து நோயாளிகளை இந்த மருத்துவமனை குணப்படுத்தியுள்ளது. அப்படி பல சிறப்புகளை பெற்ற இந்த மருத்துவமனையில் டாக்டர் சாரதா டீன் பொறுப்பில் உள்ளார். இவர் நேற்று முன்தினம் பணியில் இருக்கும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு சக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அதனை மறுத்து சாரதா, தன்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ளும்படி தெரிவித்துள்ளார். அதனையடுத்து அங்கு இருந்த மருத்துவமனை உழியர்கள் அவரை அருகில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், நோயாளிகள் என அனைவருக்கும் தீ போல பரவியது. இவ்வளவு மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி வந்து சிகிச்சை பெறுகிறோம். ஆனால் எங்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரே தனியார் மருத்துவமனைக்கு சென்றால், இந்த மருத்துவமனையின் தரம் என்ன என்று நோயாளிகளின் உறவினர்கள் பலர் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு பதில் கூற முடியமால் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் திகைத்து போனதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் கோடி கோடியாக செலவு செய்து வசதிகள் செய்து கொடுத்துள்ளது. இதற்கு தலைமை தாங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியே அரசு மருத்துவமனையையும், அங்குள்ள மருத்துவர்களையும் நம்பாமல் தனியார் மருத்துவமைக்கு செல்லலாமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அரசாங்கம் கோடி கோடியாக செலவு செய்து வசதிகள் செய்து கொடுத்துள்ளது. இதற்கு தலைமை தாங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியே அரசு மருத்துவமனையையும், அங்குள்ள மருத்துவர்களையும் நம்பாமல் தனியார் மருத்துவமைக்கு செல்லலாமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.