மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகிறது.
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் 'ஜெய் ஸ்ரீராம்' என கூறச்சொல்லி ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்தில் மயக்கமடைந்து அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பம் நடைபெற்று 48 மணிநேரம் கூட ஆகாத நிலையில், இஸ்லாமிய மதபோதகர் மீது தாக்குதல் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தின் பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபீஸ் முகமது சஹ்ருக் ஹல்தார் (26) என்ற இஸ்லாமிய மதபோதகர், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ரயில் பயணித்த இந்துத்துவா கும்பல் முஸ்லிம் மத ஆசிரியரை 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம் எழுப்ப கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் ரயிலில் இருந்து அந்த கும்பல் அவர் தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டது.
இப்படி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடும் கும்பலை மோடி அரசு கொண்டுகொள்ளாமல் செயல்படுகிறது. இந்நிலையில் இந்துத்துவா கும்பல் எழுப்பும் 'ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எதிர்வினையாற்றும் விதத்தில் ட்விட்டரில் மக்கள் #NoToJaiShriRam என்ற ஹாச்டேக்கை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஹாஸ்டோக் தற்பொழுது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹாஸ்டேக்கில் பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.