நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று அமைச்சரவையும் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பே வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைக்கெடு நடக்க வாய்ப்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.
ஆனால் தேர்தல் ஆணையம் அதனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணவில்லை. இதனிடையே, இந்தியா முழுவதும் சுமார் 370 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. அதில் வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்களை விட வாக்கு எண்ணிக்கையின் போது இயந்திரத்தில் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது என்பதை Quint ஆங்கில இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா முழுவதும் சுமார் 370 தொகுதிகளில் இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் குளறுபடிகள் நடந்துள்ள தொகுதிகளையும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,
இப்படி தமிழகத்தில் மட்டும் பல தொகுதிகளில் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக கூடுதலாக வந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் அளித்தபோதும் தேர்தல் ஆணையம் எதனையும் கண்டுக்கொள்ளாமல், அதற்கு விளக்கம் தரவும் மறுத்துள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதற்கு உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைத்து, இதுகுறித்து ஆய்வு செய்து உரிய தகவலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.