வைரல்

இனிமேல் செல்ஃபி போட்டோ, வீடியோ எடுப்பது செம ஈஸி : வந்துவிட்டது பிவோ ! #TechUpdate #Pivo

இனிமேல் செல்ஃபி போட்டோ, வீடியோ எடுப்பது செம ஈஸி : வந்துவிட்டது பிவோ ! #TechUpdate #Pivo
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மொத்த உலகமுமே தொழில்நுட்ப மயமாக மாறிவிட்ட சூழலில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையிலும் மொபைல்போன் என்பது இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. மொபைல்  போன் என்பது அழைப்புகளை அனுப்பவும், பெறவும்  பயன்படுத்தலாம் என்பதை தாண்டிய இப்போதெல்லாம் டேட்டா, பொழுதுபோக்கு என பல விதங்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதிலும், மிகக் குறிப்பாக புகைப்படம் எடுக்கவும், செல்ஃபி எடுக்கவும் மொபைல்போன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு நாளைக்கு உலக அளவில் 10 கோடி செல்ஃபிக்கள் எடுக்கப்படுவதாகவும், ஒருநொடிக்கு 10 செல்ஃபிக்கள் இன்ஸ்டாகிராமில் பதியப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

பயனாளர்களின் செல்ஃபி தேவையை நிறைவேற்ற மொபைல் நிறுவனங்களும் போட்டி போட்டு கேமராவிம் தரத்தை உயர்த்தி தங்களது மொபைல் படைப்புகளை வெளியிடுகின்றன.. சரி!! என்னதான் புகைப்படம் எடுக்க தரமான மொபைல் இருந்தாலும், தங்களை யாரவது அழகாக புகைப்படம் வீடியோ எடுத்து தரமாட்டார்களா? என்கிற ஏக்கம் ஒவ்வொரு புகைப்பட விரும்பிகளுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

இனிமேல் செல்ஃபி போட்டோ, வீடியோ எடுப்பது செம ஈஸி : வந்துவிட்டது பிவோ ! #TechUpdate #Pivo

அதற்காகவே, தொழில்நுட்ப சந்தையில் பிவோ (PIVO) என்கிற சிறிய வகை கருவி ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. இந்த பிவோ கருவியில் உங்களது மொபைல் போனை இணைத்துவிட்டால், அது அழகான புகைப்படங்கள், வீடியோ, ஜிஃப்(GIF) போன்ற அத்தனையயும் அழகாக ஒரு புகைப்படக்காரர் போல் எடுத்து தருமாம்.

முகபாவனைகள்(face recognition) மூலமாகவும், ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவும் செயல்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் எங்கு சென்றாலும்  உங்கள் முகத்தை பின்பற்றி , 360 டிகிரி கோணத்தில் திரும்பி திரும்பி உங்களை அழகாக படம்பிடித்து காட்டும் திறன் இதற்கு இருக்கிறது.

இதேபோல இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் பிரத்யேக செயலியை மொபைல் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து , இந்த கருவியுடன் இணைத்தால் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும். அதன் மூலம் வீடியோ,  புகைப்படம் என மோட்(MODE)-ஐ மாற்றிக்கொள்ளவும் , கருவியை இயக்கவும் முடியும்

COIN CELL BATTERY  மூலம் சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை இதன் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிவோ கருவியின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இது சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories