மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது முடிந்துள்ளது.
மத்தியில் பா.ஜ.க 353 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைகிறது. காங்கிரஸ் 92 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த முறை பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலவரப்படி, பா.ஜ.க.,விற்கு இந்தியாவில் பல மாநிலங்கள் ஆதரவு அளித்து இருந்தாலும், தமிழகத்தில் எப்போதுமே gobackmodi தான் உச்சத்தில் இருக்கிறது. இந்தியாவின் நிலைமைக்கும் தமிழகத்தின் நிலைமைக்கும் அப்படியே வேறுமாதிரியாக உள்ளது என்று இந்தத் தேர்தல் முடிவு காட்டியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் அ.தி.மு.க கூட்டணி 1 இடத்தில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.க.,விற்கு தமிழகத்தில் இந்த முறை ஒரு எம்.பி கூட இல்லாமல் போன நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தை கூட பிடிக்காத நிலையில், #TNRejectsBJP என்ற ஹஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அக்கட்சி படு தோல்வி அடைந்ததுள்ளது.
இந்தியா முழுவதும் மோடி, பா.ஜ.க அலை வீசுவதால் மிகப்பெரிய வெற்றி அடையலாம் என்றும், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என்றும் பா.ஜ.க போட்ட திட்டம் பலிக்கவில்லை.
அதற்குக் காரணம் நூற்றாண்டு தாண்டியும் இங்கு வேர் பரப்பி இருக்கும் திராவிட இயக்கமும், சுயமரியாதையை மக்கள் மனதில் விதைத்துச் சென்ற பெரியாரும்தான்.பெரியார் பரப்பிய அந்த திராவிடச் சிந்தனைகளை வளர்த்தது தி.மு.க. தமிழ் மண்ணில் தி.மு.க இருக்கும்வரை பா.ஜ.க.,வால் இங்கு வெற்றியின் நுனியைக் கூட ருசிக்க முடியாது. என் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.