குஜராத்தின் லிம்பயாத் என்ற இடத்தில் உள்ள காந்தியைச் சுட்டுக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேயின் பிறந்தநாளான ஞாயிறன்று, சூரியமுகி ஹனுமான் கோயிலில் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த சிலர், கோட்சேவின் படத்தை வைத்து பூஜை செய்து பிறந்ததினம் கொண்டாடினர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் நேரத்தில் இதுபோல செயல்கள் தடுத்துநிறுத்தப்பட வேண்டும் என்று பலர் வலியுறுத்தினார்.
இதனையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாகவும் கூறி போலீசார் அவர்களை போலீசார் கைது செய்தனர்.