வைரல்

மூன்று சக்கர வாகனத்தில் டெலிவரி செய்யும் மாற்றுத் திறனாளி - நம்பிக்கை மனிதர் zomato ராமு

இரண்டு கால்கள் இல்லாத இளைஞர் ஒருவர் 40 டிகிரி வெயிலில் மூன்று சக்கர சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்கிறார் ராமு.

மூன்று சக்கர வாகனத்தில் டெலிவரி செய்யும் மாற்றுத் திறனாளி - நம்பிக்கை மனிதர் zomato ராமு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பார்க்கும் இடமெல்லாம் வண்ண நிறத்தில் பனியன்கள் அணிந்து கொண்டு, பார்சல்களுடன் சாலை முழுவதும் பறந்து செல்வார்கள் உணவு டெலிவரி பாய்கள். மாநகரில் உள்ள பலர் உணவுக்கு இவர்களை நம்பித்தான் இருக்கிறார்கள். குறித்த நேரத்தில் உணவு வீடு தேடி வரும் என்பதால் பலரும் இன்று உணவு டெலிவரி நிறுவனங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

அப்படி டெலிவரி செய்யும் சோமேடோ ஊழியரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ, பார்ப்போரை சிலிர்ப்படைய செய்கிறது. அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில். இரண்டு கால்களும் இல்லாத ராமு என்பவர் தனது மூன்று சக்கர சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்கிறார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த ராமு என்ற அவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் தனது மூன்று சக்கர வாகனத்தை இயக்கி உணவு டெலிவரி செய்து வருகிறார். இவர் வாகனத்தில் மோட்டார் வசதிகள் கூட கிடையாது. அவரது கைகளில் அழுத்தி தான் அந்த வாகனத்தை இயக்குகிறார்.

அவர் 40 டிகிரி வெயிலில் வாகனத்தில் சென்று டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த விடியோவை பார்த்து பலர் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் ”வாழும் வாழ்க்கை மோசமானது என நினைக்கும் மனித சமூகத்திற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. இவருக்கு பணி வழங்கி உதவிய நிறுவனத்திற்கு நன்றி. மேலும் இதுபோல மற்ற நிறுவனங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க முன்வரவேண்டும். நிஜத்தில் இவர் தான் ஹீரோ, அவருக்கு வாழ்த்துக்கள். ராமுவுக்கு சல்யூட்" என பதிவு செய்துள்ளார்.

” ராமுவுக்கு மோட்டாரில் இயங்கும் வாகனத்தை கொடுத்து உதவினால் சிறப்பாக இருக்கும். அவர் முயற்சி வெற்றியடையும்” எனவும் பலர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இதுபோல கடின உழைப்பாளிகளின் பயண பாதுகாப்பு, வேலை பளு குறைக்க நடவடிக்கை, முறையான ஊதியம் போன்றவற்றை நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பலர் கருது தெரிவித்துள்ளனர். ராமு டெலிவரி செய்யும் வீடியோவை கீழே காணலாம்.

banner

Related Stories

Related Stories