காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்றைய தினம் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து காரில் அடுத்தகட்ட பிரச்சாரம் மேற்கொள்ளவதற்க்காக புறப்பட்டார். சாலையில் பல இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் காரில் சென்றிருக்கும் போது ஒரு பகுதில் பாஜக தொண்டர்கள் சாலையோரத்தில் நின்றிருந்த அவர்கள் பிரியங்கா காந்தி கார் வருவதை அறிந்து மோடி, மோடி என கோஷமிட்டனர். இதை பார்த்த காரை சாலையில் இருத்திவிட்டு இறங்கி வந்த பிரியங்கா காந்தி, கோஷமிட்டவர்களிடம் சிரித்த புன்னகையுடன் கை குலுக்கினார். மேலும் கை குலுக்கி கொண்டு அவர்களிடத்தில் பிரியங்கா காந்தி. “உங்களுக்கு என்று ஒரு நிலைப்பாடு உள்ளது. எனக்கென்று ஒரு நிலைப்பாடு உள்ளது” என்றார்.
பிரியங்கா சிரித்த முகத்துடன் மோடி ஆதரவாளர்களிடம் பேசியது, அவர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது மோடி ஆதரவாளர்கள் சிலரும், பிரியங்கா காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து வீடியோவை மத்திய பிரதசே காங்கிரஸ், தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
பிரியங்கா, இதற்கு முன்னாள் அவர் மத்திய பிரதேசத்தின் ரத்லம் லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, அவரிடம் பெண்கள் செஃல்பி எடுக்க விரும்பினார். இதையடுத்தது மரத் தடுப்புகளை தாண்டி காங்கிரஸ் பெண் தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்