ஃபானி புயல் கடந்த மே 3-ம் தேதி, ஒடிசா மாநிலம் கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 175 கி.மீ வேகத்தில் வேகத்தில் வீசிய சூறைக் காற்றால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. புயலால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபானி புயல், கரையைக் கடந்தபோது, மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.
சூறாவளிப்புயலால் ஏராளமான மரங்கள், வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. மின்சார கம்பங்கள் விழுந்ததால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. செல்போன் கோபுரங்கள் விழுந்ததால், செல்போன் மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டன.
புயல் கரையை கடந்த போது அடித்த சூறைக்காற்றில் நின்றுகொண்டிருந்த பேருந்து காற்றில் அடித்து செல்லப்பட்டது.
புயல் கரையை கடந்த பின் விழுந்த மரங்கள், ஒடிசா காவல் துறையின் உதவியோடு அகற்றபட்டது.
புயல் கரையை கடந்த போது புவனேஸ்வரில் உள்ள மாணவர் விடுதியில் கதவுகள் காற்றில் பறந்து சென்றது.
புயல் கரையை கடந்த போது கட்டுமான நிறுவனத்தில் நின்றுகொண்டிருந்த ராட்சத கிரேன் சாய்ந்து விழுந்தது.
புயல் கரையை கடந்ததும் பயங்கர இடிமின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
புயலோடு கனமழையும் பெய்ததால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புவனேஸ்வரில் சில ஏ.டி.எம்.கள் வேலை செய்கின்றன, ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் மின்சாரம் இல்லாததால் மூடப்பட்டிருக்கின்றன.