அருணாசல பிரதேச மாநிலத்தின் தலைநகரமான சிம்லாவிருந்து சுமார் 75 கி.மீ தூரத்தில் உள்ள கராபத்தர் பகுதியில் 25 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த மரப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரொஹ்ரு வனப்பகுதியின் வனத்துறையினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த புதைப்படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து மாநில அருங்காட்சியக பொறுப்பாளர் ஹரிஷ் சவுகான் கூறுகையில்,
கராபதர் பகுதியில், மெசோசோயின் சகாப்தத்தின் புவியியல் கால (67-250 மில்லியன் ஆண்டுக்கு முன்பு) மரப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இமாச்சல் பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இந்த மரப் படிமங்களை பாதுகாக்க திட்டமிட்டுள்ளது. இதுபோன்று, பல மரப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதை படிமங்கள் இருக்கும் இடங்களில் வேலி அமைத்து, மேலும் அதனை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இதேபோல், கடந்த பிப்ரவரி மாதத்தில், சர்வதேச விஞ்ஞானிகள் குழு, கபோனில் உள்ள பாறைகளில், உலகின் முதல் உயிரினங்களின் தொன்மையான புதைபடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். இவை சுமார் 2.1 பில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த புதைபடிமங்கள் ஆகும்.