இலங்கையில் ஈஸ்டர் நாளன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹசிமின் தந்தை மற்றும் 2 சகோதரர்களை சுட்டுக் கொன்றுள்ளது இலங்கை ராணுவம்.
இரண்டு நாட்களுக்கு முன் கலிமுனை என்ற இடத்தில் நடந்த சோதனையின் போது, ஒரு வீட்டில் இருந்த பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் துப்பாக்கிச் சண்ட நடந்தது. இதில் 15 பேரை கொன்றது ராணுவம். அந்த 15 பேரில் சஹ்ரான் ஹசிமின் தந்தை முகமது ஹசிம், சகோதரர்கள் சைனி மற்றும் ரில்வான் ஹசிம் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த விட்டில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜிகாத் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது பற்றி இவர்கள் மூன்று பேரும் பேசும் வீடியோ ஒன்று இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கொல்லப்பட்டதை சஹ்ரான் ஹசிமின் உறவினர் நியாஸ் ஷரிஃப் உறுதி செய்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று நடந்த தாக்குதலை அடுத்து 10,000 ராணுவ வீரர்கள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு, அதிபர் சிறிசேன தடை விதித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. ஆங்காங்கே குண்டுகள் மீட்க்கப்பட்டு வருவதால் மக்கள் அச்சாத்தால் வீட்டிலேயே தஞ்சமடைந்துள்ளனர். ஞாயிறு வழிபாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.