உலகின் பல்வேறு இடங்களில் நாளுக்கு நாள் குற்றச்சம்பங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அதில் பெறும்பாலான குற்றச்சம்பவங்கள் வன்முறையை சார்ந்தே நிகழ்ந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வன்முறைக்கு எதிரான சின்னம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த சிலையானது கிட்டத்தட்ட ஒரு லட்சம் கத்திகளால் உருவாக்கப்பட்ட தேவதை சிலையாகும். இது வன்முறைக்கு எதிராகவும், அமைதியை வலியுறுத்தும் விதமாகவும் உருவாக்கப்படிருப்பதாக இதனை உருவாக்கிய பிராட்லி தெரிவித்திருக்கிறார்.
இந்த சிலையின் உயரமானது 27 அடி(8மீ) . இது தற்போது லண்டனின், பிரதான நகரமான லிவர்புல் பகுதியில் உள்ள தேவாலயம் முன்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தோடும், இரக்கமான முகபாவனையோடும் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது
முற்றிலுமாக குற்றவாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கத்திகளை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதுதான் இந்த சிலையின் கூடுதல் சுவாரஸ்யமே. கத்தி சிலை (Knife Angel)என அழைக்கப்படும் இந்த சிலையானது தற்போது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது