வைரல்

ஜெர்மனிக்கு பதில் ஸ்காட்லாண்டில் தரையிறங்கிய விமானம் !

லண்டனிலிருந்து ஜெர்மனியின் டுசல்டோர்ஃப் நகருக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம், தவறுதலாக ஸ்காட்லந்தின் எடின்பர்க் நகரில் தரையிறங்கியது.

ஜெர்மனிக்கு பதில் ஸ்காட்லாண்டில் தரையிறங்கிய விமானம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

லண்டனிலிருந்து ஜெர்மனியின் டுசல்டோர்ஃப் நகருக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம், தவறுதலாக ஸ்காட்லந்தின் எடின்பர்க் நகரில் தரையிறங்கியது.பிரிட்டீஷ் ஏர்வேஸின் BA 3271 என்கிற விமானம் திட்டமிட்ட படி லண்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியில் உள்ள டசல்டார்ஃப் (Dusseldorf) விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால் தவறுதலாக லண்டனில் இருந்து பறக்கத் தொடங்கிய் BA 3271 ஜெர்மனிக்கு செல்வதற்கு பதிலாக ஸ்காட்லாந்தில் தரை இறங்கி இருக்கிறது.

இந்த பிரச்சனை குறித்து பேசிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் "ஜெர்மனியின் WDL Aviation நிறுவனம், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ்ஸின் சார்பில் அந்த விமானத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருந்தது.ஒரு பெரிய தவறு நடந்து விட்டது.அவர்கள் எங்களுக்கு கொடுத்த பறக்கும் திட்டத்தில் கூட ஸ்காட்லாந்துக்கு பறப்பதாகத் தான் திட்டம் இருந்தது. அதைத் தான் லண்டம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும் சொல்லி இருக்கிறது."

ஜெர்மனிக்கு பதில் ஸ்காட்லாண்டில் தரையிறங்கிய விமானம் !

இப்போது WDL Aviation நிறுவனத்திடம் தவறான பறக்கும் திட்டத்தை (Flight Plan) தாக்கல் செய்தீர்கள் எனப் பேசி வருகிறோம். அதை மேற்கொண்டு விசாரித்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தினர். இது தான் சேரும் இடம் விமானம் பறக்கின்ற போது எந்த ஒரு கோளாறும் இல்லை. ஆனால் தவறான பறக்கும் திட்டம் (Flight Plan) விமான கட்டுப்பாட்டறை மற்றும் BA 3271-ன் விமானிகள் என அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்ததால் எல்லோருமே விமானம் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்குக்குத் தான் பயணிக்க வேண்டும் என செயல்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறதாம்.

ஜெர்மனிக்கு பதில் ஸ்காட்லாண்டில் தரையிறங்கிய விமானம் !

ஒரு சில பயணிகள் கடுங்கோபத்தில் "எப்படி லண்டனில் இருந்து ஜெர்மனிக்கு பறக்க வேண்டிய விமானம் இப்படி ஸ்காட்லாந்தில் இறங்கியது" என சமூக வலைதளங்களில் பதிவிட்டு காலி செய்து வருகிறார். தனிப்பட்ட முறையில் மன்னிப்பு "BA 3271 விமானத்தில் பயணம் செய்த ஒவ்வொரு விமானப் பயணிகளிடமும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனிப்பட்ட முறையில் பேசி மன்னிப்பு கேட்டிருக்கிறோம்" என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் சொல்லி இருக்கிறது. அதோடு லண்டன் நகர விமான நிலையமும் தன் ட்விட்டர் பக்கத்தில் BA 3271-ல் பயணித்தவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறது.

"இந்த தவறு எப்படி நடந்தது, யாரால் நடந்தது என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறோம். அதோடு இனி இது போன்ற தவறுகள் எப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் விசாரித்து அவைகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனச் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார்களாம். 3 மணி நேர தாமதம் தவறாக ஸ்காட்லாந்தின் எடின்பெர்க்கில் தரை இறங்கிய விமானத்தில் உடனடியாக எரிபொருள் நிரப்பப்பட்டு ஜெர்மனிக்கு பறக்கத் தொடங்கி இருக்கிறார்கள். விமானம் அடுத்த 3-வது மணி நேரத்தில் ஜெர்மனியில் தரை இறங்கி இருக்கிறது. ஆக BA 3271 மூன்று மணி நேரம் தாமதமாக ஜெர்மனியின் டசல்ட்ராஃப் விமான நிலையத்துக்குச் சென்று சேர்ந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories