தமிழ்நாடு

உயர்கல்வி பெரும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு நிதியுதவி : அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

உயர்கல்வி பெரும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு நிதியுதவி : அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கரை ஊக்குவிக்கும் வகையில், அம்மாணாக்கரின் கல்வி இறுதி ஆண்டில் திறன் மேம்பாடு பயிற்சிக்கான பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி ஆதிதிராவிடர் மாணவர்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) 12,000/- 15,000/- 25,000/- பிரிவுகளின் கீழ் வழங்க ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வி பெரும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு நிதியுதவி : அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

மேலும் உயர்கல்வி ஊக்கத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கராக இருக்க வேண்டும்

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டப் பயனாளியாக இருக்க வேண்டும்.

அரசு அரசு உதவிபெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டில் கல்வி பயிலும் மாணாக்கராக இருக்க வேண்டும்.

உயர் கல்வியின் இறுதியாண்டில் உள்ள கடைசிப் பருவத்துக்கு (last semester) முந்தையப் பருவம் வரை 60 % அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

பணவுறுதி ஆவணம் பெறப்பட்டு 6 மாதத்திற்குள் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை பெறாத மாணாக்கரின் பணவுறுதி ஆவணம் நிராகரிக்கப்படும்

சம்பந்தப்பட்டப் பயிற்சி நிறுவனங்கள் தவறானத் தகவல்கள் வழங்கப்படின், அப்பயிற்சி நிறுவனம் இத்திட்டத்தின் கீழ் நீக்கப்பட்டு கருப்புப் பட்டியலில் வைக்கப்படும். நீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணாக்கருக்கு பணவுருதி ஆவணம் வழங்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories