தமிழ்நாடு

”எப்படி இப்படி ஒரு கருத்தை தெரிவிக்கலாம்?” : கஸ்தூரி பேச்சுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கு, தன் தவறை உணர்ந்து நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்கவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

”எப்படி இப்படி ஒரு கருத்தை தெரிவிக்கலாம்?” : கஸ்தூரி பேச்சுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் பார்ப்பனர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கு பெற்று, தெலுங்கு சமுதாயத்தினரையும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களையும் குறித்து இழிவான முறையில் பேசினார்.

மேலும், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையிலும் கலந்துகொண்டு அவதூறு பரப்பும் வகையில் பேசினார். இந்நிலையில், கஸ்தூரியின் பேச்சிற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது.

அதோடு,தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் புகார் அளித்ததன் அடிப்படையில், 4 பிரிவுகளில் எழும்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

மேலும்,தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், மதுரை திருநகர் காவல்நிலையத்தில் கஸ்தூரி மீதும், நம் தேசம் பாரத் என்கிற யூடியூப் பக்கம் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்குகளில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை தவறாக குறிப்பிட்டு ஏன் கூறினார்?. அதற்கான அவசியம் என்ன?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், தன்னை கற்றவர்,சமூக ஆர்வலர்,அரசியல் வாதி என தன்னை கூறும் அவர் எப்படி இப்படி கருத்தை தெரிவிக்கலாம்?. தான் கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாகவே அவரின் விளக்கம் இருந்தது என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories