தமிழ்நாடு

“அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை..” - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ?

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை..” - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அடுத்து வரும் 4 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (நவ.12) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேசியதாவது,

“தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அப்பால் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு என ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும். டெல்டா மாவட்டங்கள், புதுவை, கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (நவ.13) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

“அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை..” - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ?

மேலும் அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 14-ம் தேதி கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. அதோடு 15-ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களுக்கு கனமழைக்கான வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் - தென்மேற்கு வங்க கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், அப்பொழுது 55 கிலோமீட்டர் அடுத்து வரும் இரு தினங்களில் வீசப்படும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று (நவ.12) வரையிலான காலக்கட்டத்தில் பதிவான மழை அளவு 256 மில்லி மீட்டர். இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 259 மில்லி மீட்டர் இது இயல்பை விட ஒரு சதவீதம் குறைவு ஆகும்.” என்றார்.

banner

Related Stories

Related Stories