தமிழ்நாடு

நீலகிரி - குன்னூரில் மண் சரிவு! : மீட்புப்பணி திவிரம்!

நீலகிரி - குன்னூரில் மண் சரிவு! : மீட்புப்பணி திவிரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று (நவம்பர் 2) இரவு பெய்த கனமழையுடன் கூடிய காற்று வீசியதால் மண் சரிவு ஏற்பட்டு, ஆங்காங்கே வேரோடு மரங்கள் சாய்ந்தன.

இதனால், இரவு முதலே சாலை வழி போக்குவரத்து, ரயில் வழி போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில், இரவு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்து சாலை போக்குவரத்து, அதிகாலையில் நடந்த மீட்புப்பணிகளுக்கு பின் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

காந்திபுரம், டைகர்ஹில் வண்டிச்சோலை, சேலாஸ் சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட இடங்களில், மண்ணிற்குள் சிக்கிய தனியார் வாகனங்களை, ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு மீட்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.

நீலகிரி - குன்னூரில் மண் சரிவு! : மீட்புப்பணி திவிரம்!

இதனிடையே, மண் சரிவினால் தொடர்வண்டி பாதைகளில் உருண்டோடிய கற்பாறைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இன்று ஒரு நாள் மட்டும், மேட்டுப்பாளையம் - உதகை தொடர்வண்டி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஒரே இரவில் அதிகபட்சமாக, கீழ் கோத்தகிரியில் 14.3 செ.மீட்டர் மழையும், கோத்தகிரியில் 13.8 செ.மீட்டர் மழையும், பர்லியார் பகுதியில் 12.3 செ.மீட்டர் மழையும், குன்னூரில் 10.5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories