தமிழ்நாடு

முடிச்சூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்... எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

முடிச்சூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்... எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - அமைச்சர் சேகர்பாபு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு இன்று (நவ.2) ஆய்வு செய்தார்.

தொடர்ந்து சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெகந்நாதன் சாலையில் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள முதல்வர் படைப்பகத்தின் முன்னேற்பாடு பணிகளையும், கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையத்திலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக பெரியார் நகரில் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவி புரியும் வகையில் அரசின் சார்பில் பயன்படுத்துகின்ற பெரிய துறையாக போக்குவரத்துத்துறை உள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மக்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மாதவரம் பேருந்து நிலையத்தை சீரமைத்து, தற்போது விழா காலங்களிலும் கூட அந்த பேருந்து நிலையத்தில் இருந்து அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்ற அளவிற்கு ஒரு நல்ல தரத்தோடு செயல்பட்டு வருகிறது.

முடிச்சூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்... எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகள், சரியான திட்டமிடல் இல்லாததால் அதனை புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு பயணிகளின் தேவைகளை கேட்டு அறிந்து அனைத்து தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றியுள்ளது. தொடர்ந்து வரும் காலங்களில் அந்தப் பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டு கட்டமைப்புகளை உருவாக்குகின்ற பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோம்.

தாம்பரம் மாநகராட்சியின் முடிச்சூரில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் பணிகள் 95% நிறைவுற்றுள்ளது. கூடிய விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டிருந்தாலும் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி தொடர் ஆய்வினை மேற்கொண்டு பயணிகளின் தேவைக்கிற்காக பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி, மார்ச் மாதத்தில் அந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

முடிச்சூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்... எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர், அம்பத்தூர் ஆர்.கே.நகர் போன்ற 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் வடிவமைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளோடு பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாமல்லபுரத்தில் ஒரு பேருந்து நிலையம், செங்கல்பட்டில் ஒரு பேருந்து நிலையம் புதிய கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

18 புதிய பேருந்துகள் கட்டமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2025 டிசம்பருக்குள் 18 பேருந்து நிலையங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். வடசென்னையில் கட்டப்பட்டு வரும் 7 புதிய பேருந்து நிலையங்களும் அடுத்தாண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும். உலக தரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது என்று கேலியாக விமர்சனம் செய்தவர்கள் கூட தற்பொழுது புகழ்ந்து பேசுகிறார்கள்” என்றார்.

banner

Related Stories

Related Stories