அரசியல்

பா.ஜ.க.விலிருந்து விலகிய 16 பேர், NDA கூட்டணி கட்சிகளில் இணைந்தனர்! : என்ன நடக்கிறது மகாராஷ்டிரத்தில்?

பா.ஜ.க.விலிருந்து விலகிய 16 பேர், NDA கூட்டணி கட்சிகளில் இணைந்தனர்! : என்ன நடக்கிறது மகாராஷ்டிரத்தில்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2024ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின், பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள தேர்தலாக மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் அறியப்படுகிறது.

இத்தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) உள்ளிட்ட வலுமையான கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றன.

மறுபுறம், பா.ஜ.க தலைமையிலான NDA கூட்டணி கட்சிகள் இந்தியா கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகின்றன. அதிகபட்சமாக பா.ஜ.க 148 இடங்களில் போட்டியிடுகிறது. NDA கூட்டணியின் இதர கட்சிகளான சிவசேனா (ஷிண்டே) 82 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 55 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பா.ஜ.க.விலிருந்து விலகிய 16 பேர், NDA கூட்டணி கட்சிகளில் இணைந்தனர்! : என்ன நடக்கிறது மகாராஷ்டிரத்தில்?

இதற்கான, வேட்பாளர்கள் தேர்வும், வேட்புமனு தாக்கல்களும் நிறைவுற்று, தேர்தல் பிரச்சாரங்கள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இதனிடையே, NDA கூட்டணி பகிர்வில் சிக்கல் வராவிட்டாலும், வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்கள் எழுந்தன. சுமார் 16 பா.ஜ.க தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொள்ள இயலாத, பா.ஜ.க தலைவர்கள் 16 பேரும், பா.ஜ.க தலைமையிலான NDA கூட்டணி கட்சிகளில் இணைந்து போட்டியிட முன்வந்துள்ளனர். NDA கூட்டணி கட்சிகளும், அந்த 16 பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதனால், பா.ஜ.க கட்சியின் உள் பதற்றம் அதிகரித்தது ஒரு புறம் இருக்க, கட்சிக்காக உழைத்தவர்களை முன்னிறுத்தாமல், பா.ஜ.க.விலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதால், NDA கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories