தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் TO தேனி... பயணிகளுடன் சென்ற இரயிலில் இருந்து கழன்ற சக்கரம்.. மதுரையில் நடந்தது என்ன ?

பயணிகளுடன் சென்ற இரயிலின் சக்கரம், மதுரை அருகே கழன்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் TO தேனி... பயணிகளுடன் சென்ற இரயிலில் இருந்து கழன்ற சக்கரம்.. மதுரையில் நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனை முன்னிட்டு சிறப்பு இரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது அவ்வாறு சென்ற இரயில் ஒன்றின் சக்கரம் திடீரென கழன்றுள்ளது. ஓட்டுநரின் சாதுர்யத்தால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து தேனி போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் இரயில் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் புறப்பட்டது. இந்த இரயிலானது இன்று காலை 7.50 மணியளவில் மதுரை அருகே சென்றபோது, திடீரென முன்பக்க இன்ஜினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்றுள்ளது. சக்கரம் கழன்றுள்ளதை உணர்ந்த ஓட்டுநர், அந்த இரயிலை உடனடியாக நிறுத்தினார்.

சென்னை சென்ட்ரல் TO தேனி... பயணிகளுடன் சென்ற இரயிலில் இருந்து கழன்ற சக்கரம்.. மதுரையில் நடந்தது என்ன ?

ஓட்டுநரின் இந்த செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அங்கிருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதைத்தொடர்ந்து அந்த இரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மாற்று இரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே மதுரை இரயில் நிலையத்தில் 5-வது நடைமேடையில் இந்த இரயில் விபத்துக்குள்ளாகி நின்றதால் சென்னையில் இருந்து வரும் மற்ற சிறப்பு இரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதனால் அவ்வழியாக செல்லும் இரயில்களை வேறு தடம் வழியாக மாற்ற இரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஓடும் இரயிலில் இருந்து திடீரென சக்கரம் கழன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories