தமிழ்நாடு

தீபாவளி தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு தீக்காய பிரிவு தயாராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

தீபாவளி தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு தீக்காய பிரிவு தயாராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடு முழுவதும் தீபாவளி திருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தீக்காயம் தொடர்பாக மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் மருத்துவத்துறையில் விழிப்புணர்வால் அதிக விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தீக்காய சிகிச்சைக்காக 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய பிரிவில் தயாராக உள்ளது. பட்டாசு வெடிப்புகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக உள்ளது. மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதும், அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இதற்கு பெரிய அளவில் காரணம்.

தீபாவளி தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு தீக்காய பிரிவு தயாராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

கடந்த 24 மணி நேரத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏழு பேர் தீக்காயை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நான்கு பேர் வீடு திரும்பியுள்ளனர். இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் வீடு திரும்ப இருக்கிறார்கள்.

தீபாவளியை முன்னிட்டு 1,363 எண்ணிக்கையிலான 108 வாகனங்கள் என்று பணியில் இருக்கிறார்கள். 70 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories